வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 75,377 டெங்கு நோயாளர்கள் அடையாளம் – தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!

Tuesday, November 28th, 2023

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 75,377 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், குறித்த மாவட்டத்தில் 35,537 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 6,884 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வினைத்திறனுள்ளவர்களிடமே அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செ...
தற்காலிக பிரச்சினையே பொருட்களின் விலை உயர்வு - விரைவில் குறைவடையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் அ...
தேர்தலுக்கு முன் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!