பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Sunday, September 12th, 2021

தற்போதைய சூழ்நிலையில் இலங்கை பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் இந்த வருட இறுதியில் 4.5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுடன் இடம்பெற்ற நேர்காணலின் போதே இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இதை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

கொரோனா தொற்று பரவலினால் உலக நாடுகளைப் போன்று இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.

ஆனாலும் போதிய அளவிலான அத்தியாவசியப் பொருட்கள் களஞ்சியங்களில் காணப்படுகின்றன.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளில் சில வர்த்தகர்கள் ஈடுபட்டார்கள்.

ஆனால் இவ்வாறான முயற்சிகளை தடுக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் துவையானளவு கையிருப்பில் உள்ளதாக அரசாங்கத்திற்கு உத்தரவாதத்தை வழங்க முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: