இலங்கை முழுவதும் இலவச இணைய சேவை!

Saturday, October 29th, 2016

இலங்கைத் தீவு முழுவதும் இலவச இணைய வசதிகளை வழங்கும் நடவடிக்கையை மீண்டும் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.இதுதொடர்பான நிகழ்வு நேற்று தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் பதுளையில் நடைபெற்றது.

ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட இலவச வைபை இணைய சேவையில் ஏற்பட்ட குறைப்பாடுகள் நீக்கப்பட்டு இன்று மீண்டும் பதுளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாடு முழுவதும் 405 இடங்களில் நேற்று முதல் இலவச வைபை வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குறுதி அளித்ததனைப் போன்று குறைப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு மிகவும் வலுவான வகையில் இலவச வைபை வசதிகள் நாடு முழுவலும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரும் அடையாள அட்டையை பதிவதன் மூலம் தங்களின் தொலைப்பேசி இலக்கங்களை அதற்குள் உள்ளடக்கியதன் பின்னர் கிடைக்கும் Pin இலக்கத்தை தங்களின் தொலைப்பேசியில் பதிவு செய்து கொள்வதன் ஊடாக இலவச வைபை வலையமைப்பிற்குள் நுழைய முடியும்.

இலவச இணைய சேவையின் ஊடாக நபர் ஒருவர் 1GB அளவிலான இணைய வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும். பிரோட்பேன்ட் ஊடாக அரச நிறுவனங்களுக்கு இலவச இணைய வசதிகளை வழங்கும் நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளோம். இலங்கையில் உள்ள அதிக வேகமான இணைய வசதியை வலையமைப்புகள் ஊடாக அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1919 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் வைபை தொடர்பில் ஏதாவது தகவல் மற்றும் எந்த பகுதிகளில் பெற்றுக் கொள்ள முடியும் என்ற தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

download

Related posts: