வினைத்திறனுள்ளவர்களிடமே அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Monday, January 16th, 2017

டக்ளஸ் தேவானந்தா என்றும் ஒரே ஒரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவமூடாகவே நாம் எமது மக்களது தேவைப்பாடுகளையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்து எமது அரசியல் மக்கள் பணிகளை முன்னெடுத்தச் செல்கின்றோம்

ஆனால் மாகாணசபையையும் அதிகரித்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிடைக்கின்ற நிதிகளை எல்லாம் முடக்குவதிலும் தமது சுய தேவைகளை பூர்த்திசெய்வதிலும் மட்டுமே முனைப்புடன் செயற்படுகின்றனர். இதனால்தான் கடந்த ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட 2300 பில்லியன் ரூபா நிதியில் 2180 பில்லியன் ரூபா நிதி மீளவும் திறைசேரிக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளரும் முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

16111937_1332713690135528_621591903_n

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வட அல்வாய் நக்கீரன் விளையாட்டு கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விளையாட்டு வீரர்களுக்கான சீருடைகள் வழங்கும் நிகழ்வு   நேற்றையதினம் அதன் தலைவர்  சௌமியன் தலைமையில் நடைபெற்றது. இதில்பிரதம விருந்தினராக கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில் –

வடக்கு மாகாணசபை நிதி ஒதுக்கீடு தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கடந்த வரவு செலவு திட்ட உரையின்போது மத்திய அரசை குற்றம் சாட்டியிருந்தார் ஆனால் அவருடைய கருத்திற்கு நிதி அமைச்சர் ரவி கரணாநாயக்கா வினைத்திறனற்ற வடக்கின் மாகாண சபை உறுப்பினர்களே நிதி திரும்ப காரணம் என தெரிவித்திருந்தமை மூலம் தமிழ் மக்களுக்கு கூட்மைப்பினரது உண்மை முகம் வெளிக்கொணரப்பட்டது. இவற்றின் பின்னரும் வடக்கு மாகாணத்திற்கான நிதியை மத்திய அரசு முடக்குகின்றது என்று வடக்கின் முதல்வர் விக்கினேஸ்வரன் கனடா சென்று ஒப்பாரி வைப்பது வேடிக்கையாக உள்ளது.

16117865_1332713560135541_2102819903_n

ஆழுமையும் மக்கள் மீதான அக்கறையும் அற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது குடும்ப நலன்களை மையமாக வைத்தே தொடர்ச்சியாக அரசியல் செய்துவருகின்றனர். இதனால்தான் தீர்க்கப்ட்டிருக்கவேண்டிய பல பிரச்சினைகள் பல இன்றும் தீராப் பிரச்சினையாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இன்று இந்த பிரதேசமும் இங்க வாழும் மக்களும் பல்வேறுபட்ட தேவைகளை எதிர்பார்த்துள்ளதை காணமுடிகின்றது. கடந்த காலங்களில் எமது கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்துடன் இணைந்திருந்து செயலாற்றியமையால் எமது மக்கள் எதிர்நோக்கிவந்த பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

16118607_1332711873469043_393742455_n

ஆனால் தற்போது வினைத்திறனும் ஆழுமையும் அற்றவர்கள் எமது பகுதியின் அரியாசனத்தை அலங்கரித்து  கடந்த காலத்தில் கிடைத்தவையெல்லாம் மெல்ல மெல்ல மக்களுக்கு கிடைக்காது தடுப்பதற்கான செயற்பாடுகள் நடந்தெறிவருகின்றன. இவற்றையெல்லாம் கூறுவதை நான் அரசியல் பேசுவதாக கருதவேண்டாம். மக்களாகிய நீங்கள் சிந்திக்கவேண்டும் என்பதற்காகவே கூறுகின்றேன்

மேலும் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தாவினது வருடாந்த நிதி ஒதுக்கீடான ரூபா 150 மில்லியன் நிதியிலிருந்துதான் இத்தனை ஒதக்கீடுகளையும் தற்போது நாம் மேற்கொண்டுள்ளோம். அவரது நிதியானது யாழ் மாவட்டத்தின் அனைத்து பகுதிக்குமான ஒதுக்கீட்டுக்சுகுரியதாகும். இருந்தும் இப்பகுதியின்மீது அதிகரித்த பார்வை எம்மிடம் இருந்ததனால்தான் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. உங்களுக்கு மட்டுமல்ல உங்களது அயல் கிராமங்களுக்கும் இவ்வாறு பல திட்டங்களை கொடுத்துள்ளோம்.

16117747_1332713410135556_1253270349_n

எமது கட்சியிடம் உள்ள சிறிய அரசியல் அதிகாரத்தை கொண்டு தான் நாம் உங்களது தேவைகளை பெற்றுத்தந்து கொண்டிருக்கின்றோம் எதிர்வருங்காலத்தில் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தாவினது கரங்களுக்கு உங்களது ஒருமித்த அரசியல் பலத்தை கொடுப்பீர்களேயானால் நிச்சயமாக நிங்கள் காணும் கனவுகளை நிறைவெற்றி அனைத்து தமிழ் மக்களது வாழ்விலும் நிரந்தர வசந்தத்தை ஏற்படுத்தி தருவார் என்றார்.

16117406_1332712180135679_1111048628_n

இந்த நிகழ்வில் குறித்த பிரதேசத்தின் கிராம சேவகர் அபராஜிதன், சமுர்த்தி உத்தியோகத்தர் சசிகலாந்த், விளையாட்டு உத்தியோகத்தர் சத்தியன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பருத்தித்துறை பரதேச நிர்வாக செயலாளர் கணேசமூர்த்தி விஜிந்தன் முன்னாள் பருத்தித்துறை பரதேச சபை உறுப்பினர் தவயோகபாலன் மற்றும் நூற்றுக்கணக்கான மக்களும் கலந்துகொண்டனர்.

16128225_1332712013469029_673211256_n

Related posts: