கடன் மறுசீரமைப்பு திட்டம் ஆய்வு செய்யப்படுகிறது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, March 22nd, 2023

பிரான்சின் Lazard Company, Clifford Hans Company மற்றும் இலங்கை நிபுணர்கள் இணைந்து நாட்டின் கடனை செலுத்துவது தொடர்பில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க தேவையான கலந்துரையாடல்களை இலங்கை நிபுணர்கள் நடத்துவார்கள்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார் .

அரச நிதியை நிலைப்படுத்தவும், பொருளாதார அபிவிருத்திக்கான சாத்தியங்களை உருவாக்கவும், பொது நிறுவனங்களை சீர்திருத்தவும், ஊழலுக்கு எதிராக போராடவும் இந்த நிதி வசதி வழங்கப்படுவதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

அதன்படி, இதன் மூலம் பெறப்படும் அறக்கட்டளையில், நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து திட்டக் கடன்களும் பெறப்பட்டு, நாட்டில் அனைத்து திட்டங்களையும் மீண்டும் தொடங்கவும், IMF நிதியைப் பெறவும் முடியும் என்றார்.

வங்கிகளில் இருந்து இந்த வருட இறுதிக்குள் சுமார் ஏழு பில்லியன் டொலர்கள் நாட்டிற்குள் வருமென நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் அரசியலமைப்பின் படி, இலங்கை நாடாளுமன்றத்திற்கு நிதி தொடர்பான அதிகாரம் உள்ளது. இதன்படி, அரசியல் பாரபட்சமின்றி 48 மாதங்களுக்குள் இலங்கையில் ஒப்புக் கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் சர்வதேச ரீதியாக இலங்கையால் உலக நாடுகளை கையாள முடியாது என்பதும் இந்த வேலைத்திட்டத்தின் விசேட அம்சமாகும்.

அத்துடன், இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு எவரேனும் எதிராக இருந்தால், பாராளுமன்றத்தில் தனிப்பட்ட அரசியல் கட்சிகளின் அபிப்பிராயத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும், மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் இம்முறை நிறைவேற்றப்பட வேண்டும்.

அரசியல் நிகழ்ச்சி நிரல்களின்றி நாடு தொடர்பில் தேசிய ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது முக்கியமானதாக இருக்கும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: