ஊடகங்களில் சொற்களை பயன்படுத்த பொறிமுறை? – ஊடக அமைச்சின் செயலாளர்

Saturday, April 30th, 2016

ஊடகங்களுக்கு சட்டப் பொருத்தமில்லாத சொற்களை பயன்படுத்தாமல் இருக்க உரிய பொறிமுறை ஒன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் ஆலோசனை செய்து வருவதாக ஊடக அமைச்சின் செயலாளர் நிமல் போப்பகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், இது தொடர்பில் சட்டமா அதிபருடனும் பொலிஸ் மா அதிபருடனும் கலந்தாலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஊடகங்கள் கூட்டு எதிர்க்கட்சி என்ற பதத்தை பயன்படுத்தும் போது அதில் எந்த அரசியல் அதிகாரமும் தொடர்புபடவில்லை.

இந்தநிலையில் தாம் நல்லதை கருத்திற்கொண்டே இதனை கூறியதாகவும் எனினும் சில ஊடகங்கள் தமது கருத்தை பிழையான விடயமாக சித்தரித்ததாகவும் போப்பகே தெரிவித்துள்ளார்.

மேலும் கூட்டு எதிர்க்கட்சி என்ற பதத்துக்கு எந்த சட்ட அங்கீகாரமும் இல்லை.இலங்கையில் அரசாங்கம் உள்ளது. எதிர்க்கட்சி உள்ளது. எனினும் கூட்டு எதிர்க்கட்சி எனும் போது மக்கள் மத்தியில் முரண்பாடு ஏற்படக்கூடும். இந்தநிலையில் நல்லாட்சி அரசாங்கம் என்ற பதத்தை பயன்படுத்துவது தொடர்பிலும் அவர் ஊடகங்களிடம் கேள்வி எழுப்பினார்.

Related posts: