புதிய அரசியலமைப்பு வெளிவரும்முன் பாதகம் என்று கூறுவதை ஏற்க முடியாது!

Wednesday, September 14th, 2016

புதிய அரசியலமைப்பு வெளிவரும்முன் அதன் மூலம் நாட்டுக்குப் பாதகம் ஏற்படுவதாக சிலர் கூறிவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்களதேரர் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பானது மக்களுக்கும் நாட்டுக்கும் பொறுத்தமில்லாத செயற்பாடு குறித்து தேசிய சுதந்திர முன்னனியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட அக்கட்சியின் குழுவினர் நேற்று (13) மஹா நாயக்க தேரரைச் சந்தித்து உரையாடச் சென்றபோதே மஹா நாயக்க தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்குமேலும் கருத்து தெரிவித்த அவர் , புதிய அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதியோ பிரதமரோ நாட்டுக்கு தீங்குவிளைவிக்கும் எதனையும் செய்யமாட்டார்கள் என்று உறுதி கூறியுள்ளனர். எனவே அதுதொடர்பாக நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறினார்.

மேலும் புதிய அரசியலமைப்பு இன்னும் வெளிவரவில்லை அது பற்றி மக்களுக்கு தெரியாது. ஆகவே இது தொடர்பாக அவ்வாறு இருக்கும் இவ்வாறு இருக்குமென மக்கள் மத்தியில் பிரசாரங்கள் செய்வது பிழையானதொரு செயற்பாடாகும். இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறுகையில் :-

புதியஅரசியலமைப்பு மூலம் வடக்கையும் கிழக்கையும் இணைத்து, நிதி அதிகாரத்தை மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கு அரசுதிட்டமிடுவதாகவும் தெரிவித்தார். இது கடல் கடந்த புலிப்பயங்கர வாதிகளின் தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

8

Related posts: