முரளிக்கு திடீர் அழைப்பு!
Tuesday, August 9th, 2016
இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு இலங்கை அணியின் சுழற்பந்து ஜபாம்பவான் முத்தையா முரளிதரனை இலங்கை கிரிக்கெட் சபை அழைத்துள்ளது என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமாதிபால தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த விடயம் தொடர்பில், செயலாளர் மொஹான் டி சில்வாவுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், அவர் மூலம் முரளிக்கு அழைப்பிதல் கடிதம் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவிக்கையில், முரளிக்கான அழைப்பிதல் கடிதம் நேற்று (08) அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தோடு, இந்த அழைப்பிதல் கடிதத்துக்கான முரளியின் பதிலை எதிர்பார்த்துள்ளதாக மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை முரளி ஓய்வின் பின்னர் தனது வியாபாரத்தை கவனித்து வருவதாகவும், அவருக்கு கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்கான நேரம் இல்லையென முரளியின் மனைவி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. முரளிக்கும் கிரிக்கெட் சபைக்கும் இடையில் அண்மைக் காலங்களில் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலவச தொழிற்பயிற்சி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்!
சென்னையில் அலஸ்டர் குக் சாதனை!
ஐ.நாவின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு துபாயில் ஆரம்பம் !
|
|
|


