மதுபான விற்பனை சடுதியாகக் குறைவு – வருமானத்தை எட்டமுடியாத நிலையில் கலால் திணைக்களம் திணறல்!

Saturday, June 24th, 2023

விலை அதிகரிப்பு காரணமாக மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை குறைவடைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆகவே இவ்வருடம் வரி வருமான இலக்குகளை தம்மால் அடைய முடியவில்லை என்றும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம தலைமையில் தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இங்கு, கலால் திணைக்களத்தினால் இவ்வருடம் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 217 பில்லியன் ரூபாய் எனவும், ஜூன் மாதம் வரை 72.985 பில்லியன் ரூபாய் மாத்திரமே வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மதுபானத்தின் விலை அதிகரிப்பால் மது உற்பத்தி மற்றும் விற்பனை குறைந்துள்ளதாகவும் இதனால் எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியவில்லை என்றும் இங்கு வருகை தந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும் கலால் திணைக்களம் 110 வருட வரலாற்றைக் கொண்ட நிறுவனம் என்றும், இந்த நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கப்படாமல் இருப்பது பலவீனம் என்றும் மஹிந்தானந்த அளுத்கம சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை மதுபான தொழிற்சாலைகளில் உள்ள ஒவ்வொரு மது போத்தல்களிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கும் அமைப்பை தயார் செய்யவும் குழு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: