கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் வீடுகளைக் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதன்!

Thursday, December 31st, 2020

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாசரபையினால் கட்டப்பட்ட வீடுகளை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.

கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஊறியான், புன்னைநீராவி, தர்மபுரம் மேற்கு, கல்மடு நகர் ஆகிய கிராமங்களிலுள்ள பயனாளிகளுக்கே இன்றையதினம் இந்த வீடுகளை தவநாதன் வழங்கிவைத்தார்.

பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வமாக வீடுகளைக் கையளித்ததுடன், அந்த வீடுகளுக்கான மின்சார விநியோகம், அருகாமையிலுள்ள வீதிகள் புனரமைப்பு மற்றும் மக்களின் இதர தேவைகள் குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதன் கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்கான ஒழுங்குகளையும் செய்தார்.

இந்த நிகழ்வில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், வீடமைப்பு அதிகாரசபையின் கிளிநொச்சி முகாமையாளர் சுகாஸ், கண்டாவளை நிர்வாக கிராம உத்தியோகத்தர் வின்ஸன்ட் போல், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர் த.பார்த்தீபன், கிராம அலுவலர்கள், மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்

Related posts: