ஒவ்வொரு வாகனமும் தேசிய எரிபொருள் அனுமதி அமைப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்து!

Wednesday, August 3rd, 2022

ஒவ்வொரு வாகனமும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வாகனச் சாரதியின் அல்லது வாகனத்தை பயன்படுத்துபவரின் கையடக்க தொலைபேசி இலக்கம், அடையாள அட்டை, கடவுச்சீட்டு அல்லது வணிகப் பதிவு இலக்கம் போன்றவற்றைப் பயன்படுத்த முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஓகஸ்ட் 12 முதல், பல வாகனங்களைக் கொண்ட அரசு நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறியீடு மற்றும் அவர்களின் அனைத்து வாகனங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட கைத்தொலைபேசி எண்ணைக் கொண்டு பதிவு செய்ய முடியும்.

அவ்வாறு செய்யும்போது  தற்காலிகமாக பெறப்பட்ட QR குறியீட்டை நீக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை நேற்றைய தினம் டீசல் கப்பல் ஒன்றுக்கான கட்டணம் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். குறித்த டீசல் தொகையை தரையிறக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை பெறுதற்கான ஒரு வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் முதலாவது கப்பல் எதிர்வரும் ஒகஸ்ட் 12 மற்றும் 14 ஆம் திகதிகளுக்கு இடையில் நாட்டை வந்தடையவுள்ளது.

அதேபோல், மேலும் ஒரு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களுக்கான முற்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: