கப்பலை விடுவிக்க கப்பம்?

Friday, March 17th, 2017

சோமாலியா கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட கப்பலை விடுவிப்பதற்கு ரூபா 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூபா 760 மில்லியன்) கப்பமாக கோரப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையர்கள் 8 பேருடன் Aris 13 என்ற எண்ணெய் கப்பல் சோமலியா கடற்கொள்ளையர்களினால் கடந்த 13ஆம் திகதி கடத்தப்பட்டது.

கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது எனவும், தற்போது குறித்த கப்பல் சோமாலியா புன்ட்லான்ட்ஸ் ஆலூலா என்ற இடத்தில் நங்கூரமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த கப்பலில் இருந்த எட்டு இலங்கையர்கள் தொடர்பான விபரமும் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.

சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: