உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான சமாதான நீதிவான் பதவி பதவிநிலைக் காலத்திற்குரியது!

Wednesday, February 20th, 2019

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சமாதான நீதிவானாக பொறுப்பேற்ற போதிலும் ஏனைய சமாதான நீதிவான்களுக்கு வழங்கப்படுவது போல அதற்குரிய இலக்கம் வழங்கப்படாது என நீதி அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது என சாவகச்சேரி நகரசபையின் செயலர் கா.சண்முகதாசன் தெரிவித்தார்.

அண்மையில் சமாதான நீதிவான்களாக சத்தியப்பிரமாணம் செய்த சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினர்கள் இறப்பர் முத்திரை தயாரிப்பதற்கு சமாதான நீதிவானுக்குரிய இலக்கம் பெற்றுத்தருமாறு சபையின் தவிசாளரைக் கோரியிருந்தனர். இந்த விடயம் நீதி அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து உள்ளூராட்சி சபையின் உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களை மதிப்பளிக்கும் வகையில் சமாதான நீதிவான்களாக நீதி அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்டது எனவும், சபையின் ஆட்சிக்காலம் உள்ளவரை மட்டுமே சமாதான நீதிவான்களாகச் செயற்படுவர் என்பதால் அவர்களுக்கு சமாதான நீதிவான்களுக்குரிய இலக்கம் வழங்கப்படமாட்டாது என அறிவித்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை நகரசபையின் தவிசாளர் உப தவிசாளர் ஆகியோர் சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உத்தியோகப்பற்றற்ற நீதிவான்களாகவும் செயற்பட முடியுமெனவும் தெரிவித்தார்.

Related posts: