மட்டக்களப்பு மாவட எல்லை நிர்ணயம் குறித்து விசேட கலந்துரையாடல்!
Monday, July 26th, 2021
மட்டக்களப்பு மாவடத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் புதிய கிராம சேவையாளர் பிரிவுகளை உருவாக்குதல், புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குதல், பிரதேச செயலக எல்லைகளை விஷ்தரித்தல் போன்றவற்றின் அடிப்படையில எல்லை நிர்ணயம் விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலில் ஒவ்வொரு பிரதேச செயலகங்களும் எல்லை நிர்ணயம் தொடர்பாக முன்வைத்த முன்மொழிவுகள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
சிக்கல்களுக்குரிய பிரதேச எல்லை நிர்ணய முன்மொழிவுகள் சில எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கும், இன்னும் சில அந்தந்த பிரதேச செயலக மட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் சமூக உயர்மட்ட பிரிவினரின் பங்குபற்றலுடன் தீர்த்துக்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


