இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு!

Thursday, August 20th, 2020

9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த பாராளுமன்றத்தின் அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து சபாநாயகர் தெரிவு பிரதி சபாநாயகர் தெரிவு பாராளுமன்ற தெரிவு குழுக்களின் தலைவர்கள் ஆகிய பொறுப்புக்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் போது முதலாவது சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சபாநாயகராக தெரிவு செய்வதற்காக அமைச்சர் தினேஸ் குணவர்தன அவரது பெயரை முன்மொழிந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார அதனை வழிமொழிந்தார்.

இவரது தெரிவை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்ற உறுப்பினர்களான ரௌபகீம், மனோ கணேசன், சி. வி விக்கினேஸ்வரன், றிசாட் பதியுதீன், அதாவுல, விமல் வீரவன்ஷ, டி.சித்தார்த்தன், வாசுதேவ நாணயக்கார, சிவநேசதுரை சந்திரகாந்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்த மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்து உரையாற்றினர்.

Related posts: