மக்களின் நலன்களை முன்னிறுத்தி யாழ். சிறாம்பையடி வீதியால் கனரக வாகனங்கள் பயணிப்பதை தடைசெய்ய வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் அனுஷியா!

Tuesday, August 21st, 2018

மக்களின் நலன்களை முன்னிறுத்தி யாழ். சிறாம்பையடி வீதியால் கனரக வாகனங்கள் பயணிப்பதை தடைசெய்ய வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் திருமதி அனுஷியா சந்துரு கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த கூட்டத் தொடர் நேற்று சபை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி மிக நெருக்கமான போக்குவரத்து நெரிசல் கொண்ட ஒரு பகுதியாகும். இந்நிலையில் இவ் வீதியில் ஆரிய குளம் சந்தி மற்றும் இஸ்ரான்லி வீதி ஆகிய பகுதிகளில் இரண்டு வீதிக் சமிக்ஞை கடவைகள் (சிக்னல் போஸ்ட்) உள்ளன. இதில் ஒன்று புகையிரதத்தினது. ஒரே வீதியில் இரு சமிக்ஞை விளக்ககள் இருப்பதனால் குறித்த வீதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

ஆரிய குளம் சந்தி பகுதியில் வீதிக்கடவை உள்ளதை காரணம் காட்டி அதற்கு மாற்றீடான வழிகளை வாகன சாரதிகள் தமது விருப்பு படி மாற்றிக்கொள்கின்றனர்.

இதனால் மக்கள் வாழிடங்கள் அடர்ந்ததும் இரண்டு வாகன சுத்திகரிப்பு நிலையங்கள் சதோச நிறுவனம் உள்ளிட்ட மக்கள் பாவனைக்கும் சிறிய ரக வாகனங்கள் போக்குவரத்துக்கு பயன்படும் வீதியாக உள்ள சிராம்பையடி வீதியை இவ்வாகன சாரதிகள் பயன்படுத்திவருகின்ற நிலை காணப்படுகின்றது. இதனால் அடிக்கடி சிறாம்பையடி வீதி நெரிசலடைந்து போக்குவரத்து முடங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றது.

சிறிய வீதியான இவ்வீதியை சிக்னல் போஸ்ட்களை காரணம் காட்டி இதர பெரிய மற்றும் நடுத்தர வாகனங்களும் இதனடாக தமது பயணங்களை மேற்கொள்ள முயற்சிப்பதால் இப்பகுதியில் உள்ள மக்களது இயல்பு நிலை பாதிக்கப்படுகின்றது. அத்துடன் அடிக்கடி வீதி விபத்துக்களும் ஏற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் பல தடவைகள் இச்சபையில் கோரிக்கை முன்வைத்தும் குறித்த வீதி அகலிப்பு செய்யப்படாது அதன் மதகுகள் புனரமைக்கப்படாது சிதைவுற்று கிடக்கும் நிலையில் இவ்வாறான அதிகரித்த மேலதிக வாகனங்களின் போக்குவரத்து நடைபெறுவதால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு இது மேலும் அசைளகரியங்களை ஏற்படுத்துகின்றது.

அந்தவகையில் இவ்வீதியை மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் சிறிய ரக வாகனங்களின் போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுத்தும் நடைமுறை கொண்டவரப்பட வேண்டும் என அவர் கேரிக்கை விடுத்துள்ளார்.

Related posts: