சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – மருந்து கொள்வனவுக்கு 82 மில்லியன் டொலர்: சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Thursday, June 23rd, 2022

வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு 82 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுகாதாரத்துறை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்

மருந்து தயாரிப்பு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் 260 மில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை ஊழியர்களின் போக்குவரத்து வசதிகள் தொடர்பில் பிரச்சினைகள் நிலவுகின்றன. இதனால் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் சுகாதாரத் துறை ஊழியர்கள் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக வேலைத்திட்டம் முன்னேடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

000

Related posts: