கச்சத்தீவு விவகாரத்தை கைவிட்ட – பா.ஜா தேர்தல் அறிக்கையில் இடம்பெறாததால் கூட்டணி கட்சிகள் ஏமாற்றம்!

Monday, April 15th, 2024

கச்சத்தீவை மீட்பது குறித்த விடயம், பா.ஜ., தேர்தல் அறிக்கையில் இடம் பெறாததால், அதன் கூட்டணி கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, மத்திய காங்கிரஸ் அரசு, கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது.

கச்சத்தீவை தி.மு.க., அரசு தாரை வார்த்தது குறித்த விபரத்தை, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெற்று, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

இப் பிரச்சினை குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும், அண்மையில் காரசாரமான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், பா.ஜ., தேர்தல் அறிக்கையை, பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் பா.ஜ.க, தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் நேற்று டில்லியில் வெளியிட்டனர்.

இதில், கச்சத்தீவு மீட்பு குறித்த அம்சம் இடம்பெறாத நிலையில், தமிழக பா.ஜ., கூட்டணி கட்சிகள் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும், கடலோர உள்கட்டமைப்பு திட்டம் வாயிலாக தீவுகளை உலகளாவிய சுற்றுலா தலமாக மேம்படுத்துவோம் என்ற, வாக்குறுதி இடம்பெற்றுள்ளமை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கொவிட் - 19 A வகையான வைரேஸ் தொற்றே இலங்கையை தாக்கியுள்ளது – ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு குழுவி...
சர்வதேச நாடுகளின் அழுத்தம் மியான்மரில் நிலைமையை இன்னும் மோசமாக்கும் - இராணுவ புரட்சி தொடர்பில் சீனா...
மூடிய கதவு சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் கனேடிய ஊடகங்களில் கசிவு - கனேடிய பிரதமரிடம் தமது அதிருப்த...