மூடிய கதவு சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் கனேடிய ஊடகங்களில் கசிவு – கனேடிய பிரதமரிடம் தமது அதிருப்தியை வெளியிட்ட சீன ஜனாதிபதி!

Friday, November 18th, 2022

இந்தோனேசிய பாலித்தீவில் இடம்பெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் மூடிய கதவு சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் கனேடிய ஊடகங்களில் கசிந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் நேரில் விமர்சித்தார்.

கனேடிய ஒளிபரப்பாளர்களால் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சிகளில், இந்தோனேசியாவின் பாலி தீவில் இடம்பெற்ற உச்சிமாநாட்டில் ஜின்பிங்கும், ட்ரூடோவும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்று மொழி பெயர்ப்பாளர் மூலம் உரையாடுவதைக் காணமுடிந்தது.

இந்தோனேசிய பாலித்தீவில் இடம்பெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் மூடிய கதவு சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் கனேடிய ஊடகங்களில் கசிந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் நேரில் விமர்சித்தார்.

கனேடிய ஒளிபரப்பாளர்களால் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சிகளில், இந்தோனேசியாவின் பாலி தீவில் இடம்பெற்ற உச்சிமாநாட்டில் ஜின்பிங்கும், ட்ரூடோவும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்று மொழிபெயர்ப்பாளர் மூலம் உரையாடுவதைக் காணமுடிந்தது.

தாம் பேசிய விடயங்கள் அனைத்தும் ஊடகங்களில் கசிந்துள்ளன அது பொருத்தமானது அல்ல என்று சீன ஜனாதிபதி சிரித்துக் கொண்டே கூறுகிறார்.

ஷிற்கு பதிலளித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் நாங்கள் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான உரையாடலை நம்புகிறோம், அதையே நாங்கள் தொடர்ந்து நடத்துவோம், ஆக்கபூர்வமாக ஒன்றாகச் செயல்படுவதைத் தொடருவோம் என்று தெரிவிக்கிறார்.

இருப்பினும், அவர் பேசி முடிப்பதற்குள், சற்று கோபமடைந்து, கலந்துரையாடலை துண்டித்துவிட்டு, முதலில் நிபந்தனைகளை உருவாக்குங்கள் என்று கூறி ட்ரூடோவின் கையைக் குலுக்கிவிட்டு சீன ஜனாதிபதி அந்த இடத்தில் இருந்து நகர்கிறார்.

அவரது அதிருப்தியானது, ட்ரூடோ கடந்த செவ்வாய்க்கிழமை மூன்று ஆண்டுகளில் முதல் தடவையாக சீன ஜனாதிபதியை சந்தித்தபோது, கனேடிய தேர்தல்களில் கூறப்படும் உளவு மற்றும் சீன தலையீடு என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான கருத்துப்பரிமாறல் பற்றிய ஊடக அறிக்கைகளாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

முன்னதாக கனடாவின் மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிறுவனத்தில் பொருட்களை ஆய்வு செய்வதில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர், சீனாவிற்கு நன்மை பயக்கும் வகையில் வர்த்தக ரகசியங்களை திருட முயன்றதாக குற்றம் சுமத்தி கனேடிய காவல்துறையினரால் கடந்த திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்டார்.

ஜி20 உச்சி மாநாட்டில் ட்ரூடோவும் ஜியும் கலந்து கொண்ட வேளையில் இந்த கைது செய்தி வந்தது.

அத்துடன் தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி கனடாவின் முக்கியமான கனிமங்களில் முதலீடுகளை விலக்கிக்கொள்ள மூன்று சீன நிறுவனங்களுக்கு இந்த மாதத்தில் கனடா உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: