பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரத்தினை இறக்குமதி செய்ய நடவடிக்கை – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, August 4th, 2021

எதிர்வரும் பெரும்போகத்திற்குள் எதிர்பார்த்த சேதன பசளை உற்பத்தி அதிகரிக்காமையினால் பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரத்தினை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

கடந்த காலத்தில் நெல் கொள்வனவை தனியாருக்கு கொடுத்ததன் விளைவு அரிசி மாபியாக்கள் உருவாக காரணமாக இருந்தது.

பெரும்போகத்திற்க தேவையான இயற்கை உரம் கிடைக்காவிடின் மேலும் சிக்கல்கள் உருவாகும் என்பதினால் இரசாயன உரத்தை எதிர்வரும் பெரும்போகத்திற்கு மாத்திரம் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாயதுறை மற்றும் உரச் செயலகத்தின் பரிந்துரையின் கீழ் எதிர்வரும் பெரும்போக பயிர் செய்கைக்கான நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் உர இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் அதற்கமைய வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவுறுத்தல்!
ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதினை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே...
பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு விசேட வேலைத்திட்டம் விரைவில் - நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமென பிர...