ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருதினை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே வென்றுள்ளார்!

Monday, January 17th, 2022

நாடாளுமன்ற உறுப்பினர், ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர், ஆலோசகர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே அவர்களுக்கு ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது வழங்கப்பட்டது.

மக்கள் பிரதிநிதியாக தனது பங்கை மிகச் சிறப்பாக நிறைவேற்றி, சட்டமன்றத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்காக குரல் எழுப்பி, சட்டமியற்றும் செயல்முறையை வலுப்படுத்துவதற்காக இராஜாங்க அமைச்சர் பெர்னாண்டோபுள்ளே சார்பில் மகளிர் அரசியல் அகாடமியால் இவ் சிறப்பு பாராட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

சட்டங்களைத் தொகுக்கும் செயல்முறையில் அவரது செயலில் பங்களிப்பை பாராட்டுதல் மற்றும் அங்கீகரிப்பதற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த டிப்ளோமா விருது வழங்கும் நிகழ்வில், மகளிர் அரசியல் பீடத்தின் தலைவி கலாநிதி நிமல்கா பெர்னாண்டோவினால் இவ்விருது வழங்கப்பட்டதுடன், இராஜாங்க அமைச்சர் பெர்னாண்டோபுள்ளே சார்பாக இராஜாங்க அமைச்சரின் ஊடகச் செயலாளர் துசிதா ஜயவர்தன ஊடாக இவ்விருதை பெற்றுக்கொண்டார்.

மேலும் இந்நிழ்வில் ஆட்சி, ஜனநாயகம் மற்றும் அரசாங்கக் கொள்கை தொடர்பான டிப்ளோமா பாடநெறியை முடித்த 50 டிப்ளோமாதாரர்களுக்கு டிப்ளோமாக்களை வழங்குவதற்கு அரசியல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்ததுடன், நாடாளுமன்றச் செயலணியில் யார் மிகவும் திறம்பட பங்கேற்பார்கள் என்பதைக் கண்டறிய தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே மதிப்பீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலோசகர் கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேக்கு இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அரசியல் நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: