புதிய காற்றழுத்தத் தாழ்வு நாளை உருவாக வாய்ப்பு!
Saturday, December 3rd, 2016
தென்கிழக்கு வங்கக் கடலில் அந்தமானுக்கு தெற்கே நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளதாக டில்லியில் உள்ள இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை நாடா புயலாக மாறியது. அது திடீர் என்று வலுவிழந்து மீண்டும் காற்றழுத்த மண்டலமாக மாறி நேற்று அதிகாலை காரைக்கால் அருகே கரையை கடந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அடுத்தடுத்து காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் உருவாகி சென்னை, கடலூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் நாடாபுயல் அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் திடீர்ரென்று வலுவிழந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமானுக்கு தென்கே நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு இருப்பதாக டில்லியில் உள்ள இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம் அடையுமா? எந்தத் திசை நோக்கி நகரும் என்பது தொடர்பில் வானிலை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Related posts:
|
|
|


