ரயில் நிலையங்களில் டெங்கு பரவும் அபாயம் – போக்குவரத்துத் துறை அமைச்சர்!
Tuesday, June 27th, 2017
பெரும்பாலான ரயில் நிலையங்கள் அசுத்தமான நிலையில் இருப்பதாகவும் இவ்வாறான அசுத்தமான சுற்றுச் சூழல் காரணமாக டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவும் நிலைமை ஏற்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மருதானை ரயில் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதேவேளை எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் ரயில் நிலையங்கள் மற்றும் வழித்தடங்களை சுத்தம் செய்யும் செயற்றிட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் இந்திக்க ருவான் பத்திரண கருத்து தெரிவிக்கையில் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கையின் மீன் ஏற்றுமதி 45.9 % அதிகரிப்பு!
கிராமப்புற மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு "12,000 பாலங்கள்" உருவாக்கும் தேசிய செயல்த...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை - நீதியமைச்சர் அலி சப்ர...
|
|
|


