இலங்கையின் மீன் ஏற்றுமதி 45.9 % அதிகரிப்பு!

Thursday, December 28th, 2017

இலங்கையின் மீன் ஏற்றுமதி 45 தசம் 9 சதவீத்தால் அதிகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மீன் ஏற்றுமதித் தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து செப்டெம்பர் மாத இறுதிப் பகுதியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரை ஐரோப்பாவிற்கு 18 ஆயிரம் மெற்றிக் தொன் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இவற்றின் மொத்தப் பெறுமதி 28 ஆயிரத்து 685 மில்லியன் ரூபாவாகும். ஏற்றுமதி வருமானம் 47 தசம் ஏழு சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

Related posts: