இறக்குமதி செய்யப்பப்படும் புத்தகங்களுக்கு வரிவிலக்கு – கல்வி அமைச்சர் அகிலவிராஜ்!
Friday, December 16th, 2016
சர்வதேச அறிவை பெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு வரிவிலக்களிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேசிய வாசிப்பு வாரத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வாசிப்பு மூலம் சர்வதேச அறிவை வளப்படுத்துவதற்காக அரசாங்கம் ஊக்குவிப்புக்களை வழங்குகின்றது.
அதற்கான ஒரு சந்தர்ப்பம் இந்த பாதீட்டின் மூலம் எமக்கு கிடைத்துள்ளது. எனவே, இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கான வரியினை குறைத்து, வரிவிதிப்பை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts:
சிறார்களின் எதிர்காலம் கருதி அனைவரும் உதவி புரிய வேண்டும் - யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் !
அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் - பெப்பரல் !
Online மூலம் புகையிரத ஆசன முற்பதிவுக்கு இணையத்தளம், செயலி அறிமுகம்!
|
|
|
போதைப்பொருள் உபயோகப்படுத்தும் சாரதிகளை கண்டறிவதற்கான விசேட உபகரணம் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்!
பயணக் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா நோயாளர்கள்- இறப்புகள் அதிகரிப்பு - இர...
பண்டிகைக் காலங்களில் பட்டாசுகளால் 36 வீதமான விபத்துகள் ஏற்படுகின்றன – அதிக கவனம் செலுத்துமாறு அரசாங்...


