பாதிட்டின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் இரண்டாம் நாள் அமர்வில் ஜனாதிபதி !
Thursday, November 19th, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்றையதினம் இரண்டாவது நாளாக நாடாளுமன்றில் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர் வருகை தந்துள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி பிரதமரும் நிதி அசை்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
அதற்கமைய கடந்த 18 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.
அத்துடன் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மேலும் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23 ஆம் திகதிமுதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
வரவுச் செலவு திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


