அரிசி கையிருப்பை மறைத்து அரிசி தட்டுப்பாடு இருப்பதாக வியாபாரிகளும் விவசாயிகளும் நாடகமாட முயற்சி – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றச்சாட்டு!

Tuesday, October 17th, 2023

அரிசி கையிருப்பை மறைத்து அரிசி தட்டுப்பாடு இருப்பதாக வியாபாரிகளும் விவசாயிகளும் நாடகமாட முயற்சிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புத்தளம் பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எந்த அளவான அரிசி கையிருப்புகளை மறைத்து வைத்தாலும் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

“எங்களுக்கு அரிசி தட்டுப்பாடு இல்லை. இந்த போகத்தில் போதிய அறுவடை கிடைத்துள்ளது என்பது வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் தெரியும்.

இதை, ஐந்து மாதங்களுக்கு பயன்படுத்த முடியும் என்பதால், விவசாயிகள் வீடுகளில் வைத்துள்ளனர்.  மேலும் ஆலை உரிமையாளர்கள் இவற்றை ஆலைகளில் வைத்துள்ளனர். அதனால்தான் இந்த சிறு பற்றாக்குறை உருவாகிறது.

ஆனால் நாட்டுக்குத் தேவையான அரிசியின் அளவு.. அதாவது நம் அனைவருக்கும் தேவையான அரிசி இருக்கிறது. பாஸ்மதியை வெளிநாட்டில் இருந்து கொண்டு வர வேண்டும். கீரி சம்பாருக்கு ஓரளவு தட்டுப்பாடு உள்ளது. மற்றைய அரிசி வகைகள் போதுமான அளவு உள்ளன.

அத்துடன் எவ்வளவு மறைத்தாலும் சாதாரண நிலை அரிசி கட்டுப்பாட்டு விலையை தாண்டி செல்ல அனுமதிக்க மாட்டோம். அது கட்டுப்பாட்டு விலைக்கு கீழே பராமரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - சுகாதார அமைச்சு!
பிராந்திய கிளைகள் ஊடாக மேலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் - கொழும்பு...
உள்ளூர் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கப்படாது - அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர...