பாதுகாப்பு செயலாளர் – அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் சந்திப்பு – இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராய்வு!
Tuesday, June 21st, 2022
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கிலையார் ஓநீல் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆட்கடத்தல் உள்ளிட்ட நாடு கடந்த குற்றங்களைத் தடுப்பதற்கான இருதரப்பு ஒத்துழைப்பை விரிவாக்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஆரம்பமாகவுள்ள நல்லூர் வருடாந்த உற்சவம் - ஆலயச்சூழலில் வாழும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவ...
இலங்கையில் சுமுகமான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் ...
900 க்கும் அதிகமான சிறுவர்கள் புற்றுநோயால் பாதிப்பு – மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல்!
|
|
|


