போதியளவு எரிபொருள் கையிருப்பில் – தாங்கி ஊர்திகளை உடன் அனுப்புமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை!

Saturday, April 16th, 2022

போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளமையால், விநியோகத்தை சீராக்க, கொள்கலன் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள், தங்களின் கொள்கலன் ஊர்திகளை உரிய முனையங்களுக்கு அனுப்புமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் .தலைவர் சுமித் விஜேசிங்க கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபன ஊழியர்களும், கொள்கலன் தாங்கி ஊர்தி சாரதிகளும், புத்தாண்டு விடுமுறையில் சென்றுள்ளமையால், எரிபொருளை விநியோகிப்பதில் தாமதம் நிலவுவதாக பெற்றோலியக் கூட்டுதாபன குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த நேற்றுமுதல் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, உந்துருளிகளுக்கு 1000 ரூபா வரையிலும், முச்சக்கர வண்டிகளுக்கு 1,500 ரூபா வரையிலும் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மகிழுந்துகள், சிற்றூர்திகள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 5,000 ரூபா வரையிலும் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், பேருந்துகள், பாரவூர்திகள், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் உழவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்ளுக்கு, இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தாது என பெற்றோலியக் கூட்டுதாபனம் அறிவித்துள்ளது.

இதேநேரம், தமது எரிபொருள் விநியோகத்தில் மட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: