வடக்கில் டெங்கு தீவிரம் !

Wednesday, October 18th, 2017

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு நாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நிறைவடைந்தபோதிலும் இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு வடமாகாண சுகாதாரப்பிரிவு திட்டமிட்டிருப்பதாக யாழ் மாவட்ட சுகாதார அமைச்சு தொற்றுநோய் தடுப்பு பிரிவு டொக்டர் ஜி. ரஜீவ் தெரிவித்துள்ளார்.

இரண்டுதினங்களுக்குள் மாத்திரம் யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆல் அதிகரித்துள்ளது.  டெங்கினால் பாதிக்கப்பட்டு 250 பேர் இம்மாதத்தில்  சிகிச்சைபெற்ற  நிலையில் இன்று இத்தொகை 292ஆக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைதோறும் இந்த பரிசோதனைகளை தொடந்தும் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts:

நாவற்குழி விகாரைக்கு எதிராக எவரும் நீதிமன்றம் செல்ல முடியும் - சட்டம் அனைவருக்கும் ஒன்றே என்கிறார் வ...
உரிய முறையில் பயன்படுத்தினால் மழை நீரே பிரச்சினையைத் தீர்க்கும்  வடக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ...
சூரிய சக்தி, எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் துறைமுக நகரத்துக்கு புதிய முதலீடுகளை மேற்கொள்ளுமாறு குவைட...