பிம்ஸ்டெக் அமைப்பின் ஊடாக கட்டியெழுப்பப்படுகின்ற பிராந்திய ஒத்துழைப்பு பயன்மிக்கதாக அமைய வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, December 9th, 2021

பிம்ஸ்டெக் அமைப்பின் ஊடாக கட்டியெழுப்பப்படுகின்ற பிராந்திய ஒத்துழைப்பு பயன்மிக்கதாக அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டென்சின் லெக்ப்ஹெல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் .பிம்ஸ்டெக் அமைப்பின் ஊடாக கட்டியெழுப்பப்படுகின்ற பிராந்திய ஒத்துழைப்பு பயன்மிக்கதாக அமைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிராந்தியத்தில் வாழ்கின்ற மக்களுக்கு அதன் பிரதிபலன்கள் நேரடியாக வழங்கப்படக்கூடிய வகையில் அங்கத்துவ நாடுகளுடனும் பொதுச் செயலாளர் அலுவலகத்துடனும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிம்ஸ்டெக்கின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக அங்கத்துவ நாடுகளுக்கிடையில் முக்கியமான துறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கப் பிரிவு என்பன, இலங்கைக்குரிய பிரதான பிரிவுகளாகும். அதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை எதிர்வரும் மாதங்களில் முன்வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாகக் குறித்த தினத்தில் நடத்துவதற்கு முடியாமல் போன ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாட்டை, எதிர்வரும் வருடத்தின் முதல் காலாண்டில் நடத்த முடியுமென்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், பிம்ஸ்டெக்கின் தலைமைத்துவம் இலங்கைக்கு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிம்ஸ்டெக் பொதுச் செயலாளராக டென்சின் லெக்ப்ஹெல் நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts: