இலங்கையில் சுமுகமான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – ஐ. நா. வலியுறுத்து!

Tuesday, July 12th, 2022

இலங்கை அரசாங்கத்தின் சுமுகமான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்கும், நாட்டின் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் கோரியுள்ளார்.

இந்தநிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ந்தும் செயலாளர் நாயகம், உன்னிப்பாக அவதானித்து வருகின்றார் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் என்டோனியோ குட்டரஸ் சார்பாக, பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கத்தின் சுமுகமான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காண்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அனைத்து தரப்பினருக்கும் அவர் அழைப்பு விடுப்பதாக ஹக் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமைதியைப் பேணுவதற்கு பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்றும் செயலாளர் அழைப்பு விடுக்கிறார் என்று அந்த அறிக்கை தொடர்கிறது.

இதேவேளை இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளது என்று பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: