காலிமுகத்திடலில் நடைபெறும் வாகனத்தை தன் தலைமுடியால் இழுக்கும் 60 வயது திருச்செல்வத்தின் உலக சாதனை நிகழ்ச்சி!

Thursday, March 21st, 2024

சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் கொழும்பு காலிமுகத்திடலில் வாகனத்தை இழுத்துச் செல்லவுள்ளார்.

மெய்சிலிர்க்க வைக்கும் இந்த உலக சாதனை நிகழ்வு எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிறன்று முற்பகல் 10.00 மணி முதல் 11.00 மணி வரை காலிமுகத்திடல் (தாஜ்சமுத்திரா ஹோட்டல் முன்பாக)  நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

செல்லையா திருச்செல்வம் (60) கடந்த பத்தாண்டுகளாக தனது தலைமுடியாலும், தாடியாலும் வாகனங்களை இழுப்பது, தனது உடலின்மீது  வாகனத்தை ஓடவிடுவது போன்ற சாதனைகளைச் செய்து வருகிறார்.  தனது உலகச் சாதனை கனவை நிறைவேற்றுவதற்காக வாகனத்தை இழுக்கும் நிகழ்ச்சியை நாட்டின் தலைநகரில் நடத்தவுள்ளமை இவருக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கும் என எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

காலிமுகத்திடலுக்கு மக்கள் திரண்டு வந்து ஏகோபித்த ஆதரவை வழங்கி அவரை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாக ஏற்பாட்டுக்குழுவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

60 வயதான சாதனை நாயகன் அண்மையில் சாவகச்சேரி பஸ் நிலையமருகில் 1550 கிலோ எடையுள்ள வாகனத்தை 1500 மீற்றர் தூரத்தை 45 நிமிடங்களில் இழுத்து சாதனை படைத்துள்ளார். இந்நிகழ்வு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது. இச்சாதனை மூலம் தமிழகத்தின் சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் செல்லையா திருச்செல்வம் அவர்களது பெயரும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

வர்த்தகர் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு பாரிய சலுகைகள் வழங்கப்பட்டள்ளன - அமைச்சர் மஹிந்த அமர...
சாரதி அனுமதிப்பத்திரம் பெறவந்தவர்களில் அதிகமானோர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டறிவு - சிரேஷ்...
முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி - புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா ...