க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் தொழிநுட்ப பிரிவு மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை

Wednesday, June 21st, 2017

க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் கணித, உயிரியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு தமிழ் பேசும் மாணவர்களுக்காக மொறட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட தமிழ் மாணவர்களால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும், வருடாந்த முன்னோடிப் பரீட்சையானது எதிர்வரும் ஜுன் 24 ஆம் திகதி தொடக்கம் ஜீலை 05 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கடந்த 7 வருடகாலமாக சிறப்பாக நடாத்தப்பட்ட இப்பரீட்சையானது இம்முறை மேலும் சிறப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பின் பிரபல்யமான ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்ட எதிர்பார்க்கை வினாக்களுடன் 19 மாவட்டங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலப் பரீட்சையாக ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்படவுள்ளது. பரீட்சை முடிவில் அச்சிடப்பட்ட விடைத் தொகுதிகளும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அகில இலங்கை மற்றும் மாவட்ட ரீதியில் z-புள்ளி முறையிலான தரப்படுத்தல்களுடனான பெறுபேறுகளை ஜூலை 20 ஆம் திகதிக்கு முன்னர் இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம், கொழும்பு, கண்டி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, குருணாகல், களுத்துறை, கம்பஹா, அம்பாறை, பதுளை, மாத்தளை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பரீட்சைகள் நடாத்த ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.மேலதிக தொடர்புகளுக்கு மின்னஞ்சல் : info@moraetamils.com இணையம்

Related posts:

எதிர்வரும் திங்கள்முதல் வழமைக்கு திரும்பும் பேருந்து சேவைகள் - இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!
முட்டை, கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளும் குறைக்கப்படு...
நாகப்பட்டிணம் - காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை, நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல...