நாகப்பட்டிணம் – காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை, நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்!

Monday, October 9th, 2023

தமிழகத்தின் நாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை, எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த கப்பலுக்கு ‘செரியாபாணி” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

செரியாபாணி என்று பெயரிடப்பட்டுள்ள குளிரூட்டல் வசதியுடன் கூடிய இந்த பயணிகள் கப்பல் நேற்றும் இன்றும் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை வருவதற்கு ஆறாயிரம் லீற்றர் எரிபொருள் தேவைப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாகப்பட்டினத்திலிருந்து – இலங்கைக்கு பயணிக்க 6,500 இந்திய ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பயணிகள் தங்களுடன் 40 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் சேவையின் மூலம் நாகப்பட்டினத்தில் இருந்து 3 மணி நேரத்தில் இலங்கையை வந்தடைய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: