எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிசாரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்து!

Wednesday, March 2nd, 2022

பொலிஸ் உத்தியோகத்தர்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் கடமையில் ஈடுபடுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்களில் நீண்ட வரிசையிலிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்களில், மோதல்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் அமைதியை பேணுவதற்காக, குறித்த பகுதியின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ் மாஅதிபர், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.

அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் வரிசையில் நிற்கும் போது, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அம்பியூலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், சுற்றுலாத்துறை சார் வாகனங்கள், விவசாய செய்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி, எரிபொருளை விநியோகிக்குமாறு, பொலிஸ் மாஅதிபர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: