900 க்கும் அதிகமான சிறுவர்கள் புற்றுநோயால் பாதிப்பு – மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல்!

Tuesday, July 11th, 2023

நாட்டில் இந்த நாட்களில் குழந்தைகளிடையே சராம்பு நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..

மேலும், இந்த நோயின் அறிகுறிகளில் காய்ச்சல் மற்றும் சிவத்தல் ஆகியவை அடங்கும் என்றும், இந்த நோயின் ஆபத்துகள் குறித்து மக்கள் சரியாக அறிந்திருக்கவில்லை என லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்திருந்தார்.

“சிறுவயதில் தடுப்பூசி போடாதவர்களுக்கு இது நடந்தது. அதனால்தான் இந்த நோய்க்கு நோய் எதிர்ப்பு சக்தியாக 9 மாதங்கள் மற்றும் 3 வயதில் MMR தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. எல்லோரும் அதை பெற உழைத்தால், இது நடக்காது. ஆனால், அரிதாகவே நோய்த்தடுப்புத் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கும் இது வரலாம். அது இல்லாதவர்களுக்கும் இந்நோய் பரவுகிறது. இதன் பக்கவிளைவாக சில சமயங்களில் வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக மூளையைக்கூட பாதிக்கும். நீண்ட காலமாக, அதனால்தான், சராம்பு நோய்க்கு கொடுக்கப்பட்ட MMR தடுப்பூசியை குழந்தைகள் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”

இதேவேளை, கடந்த சில வருடங்களில் சிறுவர்களுக்கு புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி வருவதாக தெரிவித்த வைத்தியர் தீபால் பெரேரா, ஒவ்வொரு வருடமும் 19 வயதுக்குட்பட்ட 900 க்கும் அதிகமான சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, ஆண்டுதோறும் 100 குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் பாதிப்புகள் பதிவாகி வருவதாகவும், இது போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலைமைகளை எதிர்கொள்வதற்கு சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனவும், சிறுவர்கள் தொடர்ந்து விளையாடுவதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்த வைத்தியர் தீபால் பெரேரா, குழந்தைகளை கையடக்கத் தொலைபேசியிலிருந்து விலக்கி வைப்பதே சிறந்தது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: