புகையிலை பாவனையை கட்டுப்படுத்தும் திட்டங்கள் ஆரம்பம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன !

Saturday, November 26th, 2016
புகையிலை பாவனையை கட்டுப்படுத்த பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம் போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை புகையிலை பாவனையை குறைக்கும் வழிவகைகளை எடுத்துரைப்பதற்காக கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்த செயலமர்வில் கலந்துகொண்டு டொக்டர் ராஜித சேனாரட்ன உரையாற்றினார்.

பாடசாலைகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து 500 மீற்றர் சுற்று வட்டாரத்திற்குள் புகையிலை தயாரிப்புக்களின் விநியோகத்தையும் தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

வரிகளை அதிகரித்தல், பொது இடங்களில் புகைத்தலை தடை செய்தல், சிகரட் பெட்டிகளில் உருவப்படங்களுடன் கூடிய எச்சரிக்கைகளை சேர்த்தல் போன்ற நடவடிக்கைகள் பிரதானமானவை ஆகும். எதிர்காலத்தில் வெள்ளைநிற பெட்டிகள் சந்தையில் அறிமுகம் செய்யப்படும். தனி சிகரட்டுகளை விற்பனை செய்வது தடை செய்யப்படவுள்ளதென அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.வெற்றிலை கூறு, பாபுல் முதலான உற்பத்திகளை தடை செய்வதற்காக ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள மகஜரிலும் அமைச்சர் இதன் போது கைச்சாத்திட்டார்.

09a96e6da7312ed96924595ffd0b6c0a_XL

Related posts: