இலங்கையில் தனி நபரொருவரின் குறைந்தபட்ச மாதாந்தச் செலவு 5 ஆயிரத்து 353 ரூபாவாக பதிவு – தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல்!

Friday, October 15th, 2021

இலங்கையில் தனிநபரொருவரின் அடிப்படைத் தேவைகளுக்கான குறைந்தபட்ச மாதாந்தச் செலவாக ரூபா 5 ஆயிரத்து 353 கணக்கிடப்பட்டுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் மாத தரவுகளின் அடிப்படையில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களின் மாதாந்த குறைந்தபட்ச செலவு ரூபா 5 ஆயிரத்து 810 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை மிகக் குறைந்தளவு வாழ்க்கைச் செலவைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை பதிவாகியுள்ளது. அங்கு மாதாந்த குறைந்தபட்ச செலவு 5ஆயிரத்து 40 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: