புத்தாண்டு மற்றும் ரமழானுடன் இணைந்த நீண்ட விடுமுறை – அனைத்து அரச உத்தியோகத்தர்களும் தேவையான பணிகளை செய்யது அவசியம் – துறைசார் அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, April 8th, 2024

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழானுடன் இணைந்த நீண்ட விடுமுறையின் போது, அனைத்து அரச உத்தியோகத்தர்களும்(Government Employee) அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தேவையான பணிகளை செய்து  புத்தாண்டை கொண்டாட பொதுத்துறையினருக்கு உறுதுணையாக செயற்பட வேண்டும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அறிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த நீண்ட விடுமுறையின் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் பேணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் கழிவுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து பிரதேச செயலாளர்கள் உட்பட அனைத்து அரச உத்தியோகத்தர்களும் (Government Employee) அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தேவையான பணிகளை செய்து இந்நாட்டின் முக்கிய கலாசார அம்சங்களில் ஒன்றான புத்தாண்டை கொண்டாட பொதுத்துறையினருக்கு உறுதுணையாக செயற்பட வேண்டும் எனவும் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: