கிளிநொச்சியில் இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டுப் பெருவிழாவும் பண்பாட்டியல் காண்பியக் கூடக் கண்காட்சியும்!

Wednesday, December 6th, 2023

வடமாகாண பண்பாட்டுப் பெருவிழாவும் பண்பாட்டியல் காண்பியக் கூடக் கண்காட்சியும் கிளிநொச்சியில் இன்று(06) இடம்பெற்றது.

தமிழ், சிங்கள, இஸ்லாமிய, கிறிஸ்தவ பண்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் பொம்மலாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை, தமிழ் இன்னியம் உள்ளிட்ட அம்சங்களை தாங்கியவாறு கிளிநொச்சி கரடி போக்கு சந்தியில் வாகன ஊர்தி பேரணி ஆரம்பமாகி விழா மண்டபத்தை வந்தடைந்ததுடன் அங்கு விசேட கலை நிகழ்வுகளும் புத்தக கண்காட்சியும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் உயர் அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts:


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை மீறி மக்கள் நலனை நிறைவேற்றியது ஈ.பி.டி.பி. - வவுனியா மக்கள் நன...
விமானத்தில் 75 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு நீக்கம் - சிவில் விமான போக்குவரத்து ஆணைக்...
எல்லை நிர்ணய செயன்முறை மீண்டும் திருத்தப்பட வேண்டும் - தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பி...