யாழ் குடா நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு – எரிபொருளுக்கு அலைமோதிய மக்கள்
Tuesday, April 26th, 2016
யாழ்.குடாநாட்டில் பெற்றோல் மற்றும் டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் அலை மோதுகின்றனர்.
பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு உருவாக போவதாக மக்கள் மததியில் செய்திகள் பரவிவருவதால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் பதுக்கப்படுவதுடன் எரிபொருள் கையிருப்பில் இல்லை என மக்கள் திருப்பி அனுப்பபடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரம் எரி பொருள் நிரப்பப்படுவதால் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.
Related posts:
406 புதிய வைத்தியர்கள் நியமனம் - மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருந்தின் விலையிலும் திருத்தம் - அமைச்...
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவை மையமாகக் கொண்டு வடக்கில் பாரிய திட்டம் - அமைச்சர் ரமேஷ் பத்திரன ...
சீனாவில் உள்ள "வெள்ளை குதிரை” விகாரை வளாகத்தின் இலங்கை விகாரை மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் மீண்...
|
|
|


