வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள நூறு பேருக்கு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

Tuesday, July 12th, 2016

யாழ்.காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள மக்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல்  நேற்று திங்கட்கிழமை(11) நாட்டப்பட்டது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினால் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் காணிகள் அற்ற மக்கள் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் மீள்குடியேற்றப்பட்டனர்.

இவ்வாறு மீள்குடியேற்றப்பட்ட மக்களில் நூறு  பேருக்கு முதற்கட்டமாக இராணுவம் தலா -25  இலட்சம் ரூபா செலவில் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளது.

இன்றைய அடிக்கல் நாட்டும்  நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ப.செந்தில்நந்தனன், தெல்லிப்பளை பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கஞ்சாவுடன் இளைஞன் கைது 

Related posts: