யாழ் யமுனா ஏரியில் ஆணின் சடலம் மீட்பு!
Friday, June 1st, 2018
யாழ் நல்லூரலுள்ள யமுனா ஏரியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
குறித்த சடலம் இன்று அதிகாலை யமுனா ஏரியில் மிதந்த நலையில் பொதுமக்களால் அவதானிக்கப்பட்டு பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
சடலமாக மீட்கப்பட்டவர் நல்லூர் கோவில் வீதியைச்சேர்ந்த 27 வயதுடை மாரிமுத்து கோவிந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கடந்த மூன்று நாட்களிற்கு முன்னர் இவர் காணாமல் போயிருந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts:
மத்திய வங்கியின் நிதிச்சபை கூட்டம் இன்று!
மரக்கறியின் கேள்வி அதிகரிப்பு!
சுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றார்!
|
|
|


