பாகிஸ்தானின் ஒத்துழைப்புடன் இலங்கையில் கரும்புச்செய்கையை!
Friday, May 4th, 2018
நவீன நடை முறைகளை இலங்கையில் பயன்படுத்தி கரும்பு செய்கையை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த திட்டத்திற்கு பாகிஸ்தானின் ஒத்துழைப்பு பெறப்படும் எனவும் இதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் இலங்கையின் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் இரு நாடுகளுக்கு இடையில் வணிக நோக்கில் கரும்பு வகைகள் பரிமாறிக் கொள்ளப்படும் எனவும் இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இரு நாடுகளும் கைச்சாத்திடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கின் அமைச்சர்களது ஊழலை விசாரிக்கும் குழுவையும் விசாரணை செய்ய குழு அமைக்கப்படுமா - ஈ.பி.டி.பியின்...
அடுத்த வாரமளவில் ரஷ்யாவினால் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும்!
பாடசாலை மாணவர்களின் தடுப்பூசி தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்படும் - சுகாதா...
|
|
|


