விதிமுறைகளை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை – மஹிந்த தேசப்பிரிய!
Tuesday, October 8th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறும் வேட்பாளர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்வுகள் இடம்பெற்று முடிந்தபின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு வேட்பு மனு தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களுக்குமான தேர்தல் விதிமுறைகளும் நிபந்தனைகளும் மஹிந்த தேசப்பிரியவால் வாசிக்கப்பட்டது.
அத்துடன் தேர்தல்கள் தொடர்பில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் பின்பற்ற வேண்டியதும் கட்டாயமானதுமானதுமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இருபாலையில் 84 வீடுகள் அமைப்பு - கடன் சுமையால் திண்டாடும் பயனாளிகள்!
பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்க யாழ் வர்த்தக சங்கம் விஷேட திட்டம் - வீடுகளில் இருந்து பொருட் கொள்வன...
மகன் வீட்டுக்கு வரவில்லை - தாய் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்ப்பு!
|
|
|


