இருபாலையில் 84 வீடுகள் அமைப்பு – கடன் சுமையால் திண்டாடும் பயனாளிகள்!

Monday, September 30th, 2019

கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் உள்ள இருபாலை தெற்கு ஜே/257 வீட்டுத்திட்டத்தில் உள்ள 84 வீட்டுத்திட்டப் பயனாளிகளுக் கு உரிய நீதி கிடைக்காததால் கடன் சுமையால் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் வளங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கு உரிய காலப்பகுதியில் நிர்மாணத்துக்கு ஏற்ற வகையில் பிரதேச செயலக அதிகாரிகளால் நிதி வளங்கப்படுவது வழமை.

இவ்வாறான நிலையில் இருபாலையில் 84 வீடுகளுக்கு முதற்கட்ட நிதியாக அத்திபாரம் இடுவதற்காக 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 20 பயனாளிகளுக்கு மட்டும் கடந்த வாரம் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் ஏனையவர்களுக்கு நிதி வழங்கப்படவில்லை.

வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரு மாதங்கள் கடந்த நிலையில் தாம் வாழ்ந்த தற்காலிகக் குடிசைகளையும் அகற்றிவிட்டு அல்லற்படுவதாகவும் வீட்டை விரைவாக அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையுடன்  ஆரம்பித்த தமக்கு நிதி வழங்கப்படுவது தாமதமாகவே உள்ளது எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

கொட்டும் மழையில் அயல் வீடுகளில் தஞ்சம் புகும் தாம் தமது வீட்டை பாதுகாப்பாக அமைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடனும்   தமக்கான நிதி விரைவாகக் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையிலும் வங்கிகளில் கடன்களைப் பெற்ற நகைகளை அடகு வைத்;தாகவும் தெரிவித்தனர்.

வீட்டுத்திட்ட நிதி தாமதமாக கிடைக்கும் அதே வேளை குறித்த வீட்டுத்திட்டப் பயனாளிகளின் நகைகளுக்கான வங்கி வட்டி வீதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே குறித்த மக்களின் வீடில்லாப்பிரச்சனையைத் தீர்க்க முன்வந்த அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் தற்போது குறித்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர்.

Related posts: