இளம் பிக்குகளின் மோசமான செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி!
Saturday, August 12th, 2017
இளம் பிக்குமார்கள் சிலர் நடந்து கொள்ளும் விதத்தால் பிக்குகள் தொடர்பில் மக்களிடம் ஏற்படக்கூடிய தவறான எண்ணங்களைத் தவிர்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாத்தறை வெஹெரஹேன பூர்வாராம ரஜமகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சில இளம் பிக்குமார்கள் நடந்து கொள்ளும் விதம் ஊடகங்களினூடாக உலகம் முழுவதும் காண்பிக்கப்படுவதனால் பிக்குகள் தொடர்பாக மக்களிடம் ஏற்படக்கூடிய தவறான எண்ணங்களைத் தவிர்க்க முடியாது.
எனவே, உன்னதமான பிக்குகள் சமூகத்தின் கௌரவத்தையும், நன்மதிப்பையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோரியுள்ளார்.
Related posts:
ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி - மத்திய வங்கி அதிரடி நடவடிக்கை!
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நீடித்த இடைவெளி அவசியம் - சுகாதார அமைச்சு!
பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!
|
|
|


