பரீட்சை காலப்பகுதியில் தடையின்றி மின்சாரம் – பரீட்சார்த்திகளின் நலன்கருதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அறிவிப்பு!

Friday, May 20th, 2022

கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியிலும், குறித்த காலத்தில் மாலை 6.30இன் பின்னரும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, நடவடிக்கை எடுத்துள்ளது.

517,496 பரீட்சார்த்திகளின் நலன்கருதி இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் எதிர்வரும் முதலாம் திகதிவரையான காலப்பகுதிக்குள், பரீட்சை இடம்பெறும் காலத்திலும், மாலை 6 மணியின் பின்னரும் மின்தடையை அமுலாக்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபையை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு அவசியமான எரிபொருள் மற்றும் நீர் உள்ளிட்ட வளங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

இதேநேரம், எதிர்வரும், 21ஆம், 22ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில், மாலை 6 மணியின் பின்னர், தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், ஜுன் மாதம் முதலாம் திகதிவரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: