பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு கல்லூரி குழு – இராணுவதளபதி சந்திப்பு!
Wednesday, August 16th, 2017
பங்களாதேசஷ் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் குழுவினர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இராணுவ தலைமையகத்தில் நேற்றையதினம் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இக்குழுவின் தலைவராக மேஜர் ஜெனரல் எஸ்.எம் சவூயிடீன் அகமட், பிரிகேடியர் ஜெனரல் அபு தகர் முகமட் இப்ராகிம் சிரேஸ்ட பணிப்பாளராகவும், பிரிகேடியர் ஜெனரல் பைசிட் சர்வர் கொமடோர் எஸ் அஸ்லாம் பாவஷ் ஆகியோர் இராணுவ தளபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் குழுவினர்களுக்கு இராணுவ தளபதியினால் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
Related posts:
அடுத்த வருடம் மின்சார புகையிரத சேவை!
போதைப்பொருள் ஒழிப்பிற்கான விசேட வேலைத் திட்டம்!
20 வருடங்களுக்கு முன் அமெரிக்கா அதிர்ந்த நாள் இன்று.!
|
|
|


